அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மருத்துவமனையில் அனுமதி: டெங்கு காய்ச்சலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடும் காய்ச்சல் காரணமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல் பரவியுள்ளது.

சிவகாசி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வான ராஜேந்திர பாலாஜி முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவையில் செய்தி, சிறப்புப் பணிகள் செயலாக்கத் துறை அமைச்சராக உள்ளார்.

அவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடு்த்து அவர் எம்.எல்.ஏ. விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் காய்ச்சல் தீவிரமடைந்ததால் நேற்று அதிகாலை சென்னை கீரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கிடையே அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகின்றது. ஆனால் இது குறித்து மருத்துவ மனை தரப்போ அல்லது அமைச்சர் தரப்போ விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+