கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி: தூக்கிலிட ரூ.5,000

26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் நேற்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிடப்பட்ட சில மணிநேரத்தில் அவனது உடல் சிறையிலேயே புதைக்கப்பட்டது. கசாபை நாங்கள் பணமே வாங்காமல் தூக்கிலிடுகிறோம் என்று பலர் விருப்பம் தெரிவித்தனர் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், முன்பெல்லாம் கைதியை தூக்கிலிடுபவருக்கு ரூ.10 கொடுக்கப்படும். தற்போது ரூ.5,000 கொடுக்கப்படுகிறது என்றார்.
கசாபை தூக்கிலிட விருப்பம் தெரிவித்தவர்களில் மீரட் மத்திய சிறையில் தூக்கிலிடும் பணியில் இருந்த மாமு சிங்கும் ஒருவர். ஆனால் அவர் கடந்த ஆண்டு மே மாதம் தனது ஆசை நிறைவேறாமலேயே இறந்துவி்ட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலைளிகளை தூக்கிலிட்ட கல்லு சிங்கின் மகன் தான் மாமு சிங்.
கசாபை தூக்கிலிட்டது யார் என்ற விவரத்தை தெரிவிக்க போலீசார் தயாராக இல்லை. கடந்த 1995ம் ஆண்டுக்கு பிறகு நேற்று தான் மகாராஷ்டிராவில் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார். கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அலிபாகைச் சேர்ந்த சுதாகர் ஜோஷி என்பவர் தான் கசாபுக்கு முன்பு ஏர்வாடா சிறையில் கடைசியாக தூக்கிலிடப்பட்டவர் ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 17 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications