ராஜீவ் காந்தி கொலையாளிகளையும் உடனே தூக்கில் போட வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

இது குறித்து அவர் கோபியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
26/11 மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாபை தூக்கிலிட்டதை நாட்டு மக்கள் இனிப்பு வழங்கி கொண்டுகின்றனர். அதனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகள் மற்றும் நாடாளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளையும் உடனே தூக்கிலிட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பவர்களை நாடு கடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ கூறுவது அபத்தமானது. தீவிரவாதத்திற்கு கடுமையான தண்டனை இருக்க வேண்டும்.
2 மணிநேர மின்வெட்டு இருந்ததால் திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தனர். ஆனால் தற்போது அதிமுக ஆட்சியிலோ 20 மணிநேரம் மின்வெட்டு உள்ளது. அதனால் ஜெயலலிதா மின்வெட்டு குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டு மின்வெட்டை சரி செய்யும் வழிகள் குறித்து யோசிக்க வேண்டும். பிரதமருக்கு கடிதம் எழுதுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications