தயாநிதி தொகுதியில் ராகுல் போட்டியிட கங்காவிடம் மனு கொடுத்த காங்கிரஸார்!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது எம்.பியாக இருக்கும் மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸார் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னைக்கு வந்த கட்சி மேலிடப் பிரதிநிதியிடம் அவர்கள் கூட்டமாக மனுவும் கொடுத்தனர்.
லோக்சபா தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி சத்தம் போடாமல் தயாராகி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் நான்கு பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்து கட்சி சார்பில் யாரை வேட்பாளராகப் போட்டியிடலாம் என்று கருத்து கேட்டு வருகிறார் ராகுல் காந்தி.
அந்த வகையில் தமிழகத்திற்கும் நான்கு பேர் வந்துள்ளனர். இவர்கள் கங்கா பவானி தலைமையில் வந்துள்ளனர். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பலரும் சீட் கேட்டு மனு கொடுத்தனர்.
மத்திய சென்னை யாருக்கு?
மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் யார் போட்டியிடலாம் என்று காங்கிரஸாரை உட்கார வைத்து ஆலோசனை கேட்டார் கங்கா பவானி. அதற்கு அவர்கள், தத்தமது கருத்துக்களைக் கூறினர்.
காங்கிரஸின் பல்வேறு கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கோஷ்டித் தலைவரின் பெயர்களைக் கூறி இவரையே நிற்க வையுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். பலர் ஜி.கே.வாசன் பெயரைப் பரிந்துரைத்தனராம்.
கார்த்தி அல்லது ராகுலுக்கு தர அனுராதா கோரிக்கை
மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அனுராதா அபி தலைமையிலான ஒரு குழுவினர், ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல அனுராதா அபி தனியாக கொடுத்த மனுவில், ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகியோரில் ஒருவரை நிறுத்தலாம், அது கட்சியை வலுப்படுத்தும் என்றும் கூறியிருந்தார்.
வட சென்னை வாசனுக்கே
அதேபோல வட சென்னை தொகுதியில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் போட்டியிட வேண்டும் என்று கூறி ஒரு குரூப் கங்கா பவானியிடம் மனு கொடுத்ததாம். இந்தக் கருத்தாலோசனைக் கூட்டத்தில் ஏகப்பட்ட கோஷ்டிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications