கசாப் தூக்கிலிடப்பட்டதற்கு பதிலாக சரப்ஜித்சிங்கை தூக்கில் போட இம்ரான்கான் கட்சி கோரிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதற்கு பதிலடியாக அந்நாட்டு சிறையில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங்கை உடனே தூக்கிலிட வேண்டும் என்று இம்ரான்கானின் தெக்ரிக் இ இன்சாப் கட்சி வலியுறுத்தி உள்ளது.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டதற்கு தெக்ரிக் இ இன்சாப் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் நயமுல்லாகான் கூறுகையில்,
இந்தியாவை சேர்ந்த கைதி சரப்ஜித்சிங் கடந்த 22 ஆண்டுகளாக தூக்கிலிடப்படாமல் இருக்கிறார். ஆனால், இந்தியா 4 ஆண்டுகளிலேயே கசாப்பை தூக்கிலிட்டு கொன்று விட்டது. இதற்கு பதிலடியாக சரப்ஜித்சிங்கையும் விரைவில் தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த பேச்சுக்கு சரப்ஜித்சிங்கின் சட்ட ஆலோசகர் அவாயிஷ் ஷேக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் சரப்ஜித்சிங் வழக்கு பற்றி தெரியாமல் கீழ்தரமான அரசியல் நடத்துகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications