கெஜ்ரிவால் கட்சி பெயர் ‘ஆம் ஆத்மி’.. காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

Arvind Kejriwal
டெல்லி: சமூக ஆர்வலரான அர்விந்த் கெஜ்ரிவால் தமது கட்சிக்கு "ஆம் ஆத்மி பார்ட்டி" என்று பெயரிட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இந்தியா இயக்கத்தில் இருந்தவர் கெஜ்ரிவால். பின்னர் அவரிடமிருந்து விலகி தனி ஆவர்த்தனம் காட்டத் தொடங்கினார். தேர்தல் அரசியலில் பங்கேற்கப் போவதாகவும் கட்சி தொடங்க இருப்பதாகவும் அறிவித்தார்.

நவம்பர் 26-ந் தேதியன்று புதிய கட்சிக்கான தொடக்க விழாவை நடத்தப் போவதாக அறிவித்திருந்த கெஜ்ரிவால் இன்று தமது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். "ஆம் ஆத்மி" என்பதுதான் அர்விந்த் கெஜ்ரிவால் கட்சியின் பெயர்.

டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் தமது ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அதில் கெஜ்ரிவால் தமது கட்சியின் பெயரை அறிவித்தார். அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், புதிய அரசியல் கட்சியின் பெயர் 'ஆம் ஆத்மி பார்ட்டி'. பாமர ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இக்கட்சி உறுப்பினராக இருப்பர். நாங்கள் தேர்தல்களில் போட்டியிடுவோம். இவர்கள் ஊழலில் ஈடுபடமாட்டார்கள். இதன் மூலம் ஒரு சாதாரண மனிதன் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும். கட்சியின் கொள்கைகளை வல்லுநர்கள் வடிவமைக்கின்றனர். கட்சிக்குரிய 30 சட்டத்திட்டங்களை அவர்கள் முடிவு செய்வர் என்றார்.

இதனிடையே 'ஆம் ஆத்மி"என்ற பெயரை கெஜ்ரிவால் குழு பயன்படுத்த காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி உருவான காலம் முதலே ஆம் ஆத்மி- என்ற முழக்கத்தை (சாதாரண மக்களுக்கான) காங்கிரஸ்தான் பயன்படுத்துகிறது. இதை எவரும் ஹைஜாக் செய்து விட முடியாது என்று மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி ட்விட்டரில் சாடியுள்ளார்.

கட்சி தொடங்குன முதல் நாளிலேயே கலவரமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+