சி.ஏ.ஜி. மீதான ஆர்.பி.சிங். புகார்: பார்லி.யில் விவாதம் நடத்த கோரி தீர்மானம் கொண்டு வருகிறது திமுக
சென்னை: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான கணக்கு தணிக்கை அறிக்கை மோசடியானது என்று அத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர்.பி.சிங். கூறியிருக்கும் புகார் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்றத்தில் திமுக தீர்மானம் கொண்டுவர இருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததால் ரூ1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது என்பது கணக்கு தணிக்கைத் துறையின் அறிக்கையின் குற்றச்சாட்டு. இது நாட்டில் பெரும் புயலை எழுப்பியது. இப்புயலில் திமுகவின் அமைச்சராக இருந்த ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் பதவி இழக்க நேரிட்டது. ஆ.ராசா, ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த புகாரால் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியையும் சந்திக்க நேரிட்டது. இது தொடர்பான வழக்கு இன்னமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தணிக்கைத் துறை தலைவர் அலுவலகத்தில் தொலைத்தொடர்பு துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர்.பி.சிங் அதிரடியான உண்மைகளை அம்பலப்படுத்தினார். இது மீண்டும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ரூ1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்ற அறிக்கையில் தம்மை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர் என்றும் இதில் பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவரான முரளி மனோகர் ஜோஷிக்கும் தொடர்பிருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் பாஜகவும் காங்கிரஸும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் சென்னை வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அது தொடர்பாகவே கபில்சிபல், கருணாநிதியை சந்திக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் 2ஜி விவகாரத்தில் பெரும் இழப்புகளை சந்தித்திருக்கும் திமுக மூலம், ஆர்.பி.சிங். புகார் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு விரும்புவதாக தெரிகிறது. இதன் காரணமாகத்தான் கபில்சிபலை சென்னைக்கு அனுப்ப இருப்பதாகக் கூறப்படுகிறது.
2ஜியில் தீக்குளித்த திமுக சாபவிமோசனம் பெறுகிறதோ?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications