வடசென்னை அனல்மின் நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெ
சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு உடனடியாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான மின்பற்றாக்குறையைத் தாங்கள் அறிவீர்கள். தமிழகத்தில் நிலவும் 4,000 மெகாவாட் மின்பற்றாக்குறையைச் சந்திக்கவும், மின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்தவும் எனது அரசு கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் 5,813 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,600 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள வடசென்னை அனல்மின் நிலையமும் (நிலை-2) ஒன்று.
இந்த மின் திட்டத்தின் இரண்டு யூனிட்டுகளும் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஏப்ரல்-மே மாதத்தில் மின் உற்பத்திக்குத் தயாராக உள்ளது. ஆனால் அதற்குக் கடந்த 6 ஆண்டுகளாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தி வருகிறது. இதனால் மின் உற்பத்தியைத் துவங்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு இந்த மின் திட்டம் தொடர்பாகப் புதிய விண்ணப்பித்தல் ஏதுமின்றி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications