For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடைச்சல் ராம்ஜெத்மலானி மீது பாஜக நடவடிக்கை எடுக்கிறது

By Mathi
Google Oneindia Tamil News

Ram Jethmalani
டெல்லி: பாரதிய ஜனதாவில் கலகக் குரல் எழுப்பி வரும் மூத்த தலைவரான ராம்ஜெத்மலானி மீது அக்கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கத்காரி ராஜினாமா செய்ய வேண்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியையே அறிவிக்க வேண்டும் என்று 'சவுண்டு' கொடுத்துக் கொண்டிருந்தவர் ராம்ஜெத்மலானி. இந்நிலையில் சிபிஐ இயக்குனர் நியமனத்தை பாஜக எதிர்த்தது தவறு என்று கட்சித் தலைவர் கத்காரிக்கு கடிதம் அனுப்பினார் அவர்.

இதனால் கடுப்பாகிக் கிடக்கிறது பாஜக. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் ஹுசேன், கட்சித் தலைவர் கத்காரிக்கு எதிராக பகிரங்கமாக குற்றம்சாட்டிய ராம்ஜெத்மலானி தற்போது கட்சியின் மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அவரது குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நாங்கள் நிராகரிக்கிறோம். இது தொடர்பாக ராம்ஜெத்மலானி மீது உரிய நேரத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.

அப்ப ராம்ஜெத்மலானிக்கு குட்டு கன்பார்ம்!

English summary
The Bharatiya Janata Party (BJP) today hinted at disciplinary action against Ram Jethmalani, who has disagreed with its stand on the appointment of the new Central Bureau of Investigation (CBI) director and earlier demanded party chief Nitin Gadkari's resignation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X