மின்வெட்டு எதிரொலி: குஜராத், மகாராஷ்டிராவில் 'தஞ்சம்' கோரும் தமிழக தொழில் நிறுவனங்கள்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான மின்வெட்டு நீடித்து வருகிறது. இதனால் உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு பெரும் நட்டத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு தொழில்துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் கோவையில் பின்னலாடை தொழில்துறையினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநில அதிகாரிகள் கலந்து கொண்டிருக்கின்றன. இக்கூட்டத்தில் தங்களது மாநிலத்தில் தொழில் நடத்தினால் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை விவரித்து வலை விரித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தங்களது தொழிற்சாலைகளை அந்த மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்ய தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் முடிவடைந்த பின்னர் முடிவெடுக்கலாம் என சில தொழில் நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன.
வாழ முடியாமல் பிற ஊர்களுக்கும் நாடுகளுக்கும் போவதை 'அகதி'யாக செல்லுதல் எனக் கூறுவோம்.. மின்வெட்டு இல்லாமல் இடம்பெயருவதற்கு என்ன சொல்வோம்?












Click it and Unblock the Notifications