பிடிக்க வந்த போலீஸ்.. தப்ப தீக்குளித்த சகோதரர்கள் - இருவரும் பலி
பாலசோர், ஒடிசா: வழக்கு ஒன்றில் தங்களைப் போலீஸார் பிடிக்க வந்ததால் ஒடிசாவைச் சேர்ந்த இரு சகோதரர்கள் வீட்டில் தீக்குளித்து விட்டனர். அவர்களை மீட்டு போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒடிசா மாநிலம் பாலசோரைச் சேர்ந்தவர்கள் ஷேக் சாதிக், சபீர் சாதிக். இருவரும் சகோதரர்கள். இவர்கள் மீது தாக்குதல் வழக்கை போலீஸார் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இருவரையும் விசாரிக்க அழைப்பதற்காக அவர்களது வீட்டுக்குப் போலீஸார் சென்றனர். இதைப் பார்த்த இரு சகோதரர்களும் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பிக்க தீக்குளித்து விட்டனர்.
இதில் இருவரும் தீயில் கருகித் துடித்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இரு சகோதரர்களும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த இரு சகோதரர்களும் இன்டீரியர் டெக்கரெஷன் பிசினஸில் ஈடுபட்டிருந்தனர் என்று போலீஸார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications