என் உயிர் உள்ளவரை ஈழத் தமிழர்களுக்காக பாடுபடுவேன்.. ராம் ஜேத்மலானி
டெல்லி: என் உயிர் உள்ளவரை ஈழத் தமிழர்களுக்காகவும், அவர்களுக்காகப் போராடி வரும் வைகோவுக்காகவும் எனது முழு சக்தியையும் திரட்டிப் பாடுபடுவேன் என்று முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி கூறியுள்ளார்.
வைகோவின் "ஈழத்தில் இனக்கொலை- இதயத்தில் ரத்தம்" என்ற நூலின் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பதிப்புகளுடன் இலங்கை போர் தொடர்பான சிடி ஆகியவற்றை வெளியிடும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராம்ஜெத்மலானி தலைமை வகித்தார்.
நூலை டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் வெளியிட மூத்த எழுத்தாளர் குல்தீப் நய்யார் பெற்றுக் கொண்டார்
புத்தக வெளியீட்டுக்குப் பின்னர் ராம் ஜேத்மலானி பேசுகையில்,
இந்தியாவில் காஷ்மீர் பிரச்சினையையும், இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்சினையையும் ஒன்றாக வைத்து அணுகக்கூடாது. இரண்டும் வெவ்வேறான
பிரச்சினைகள். காஷ்மீர் மாநிலம் ஒரே அரசாக இருந்தது. இலங்கையில் தமிழர் அரசு வேறு, சிங்களர் அரசு வேறாக இருந்தன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புச் செய்த காஷ்மீரில் இருந்து வெளியேறிய பின்னரே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் போட்டது. ஆனால் பாகிஸ்தான் வெளியேறவில்லை; பொது வாக்கெடுப்பு நடக்கவில்லை.
பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியை, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே சுலபமாக ஏமாற்றினார். பிரபாகரனை அரசு விருந்தாளியாக இந்தியாவுக்கு அழைத்து வந்த ராஜீவ்காந்தி, பின்னர் நம்பிக்கை துரோகம் செய்து, இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழர்களைத் தாக்கச் செய்தார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனைகூட செய்வது இல்லை என்று, தொலைநோக்கோடு முடிவு எடுத்தார். ஆனால், இந்தியாவின் காங்கிரஸ் அரசு தமிழர்களுக்குத் துரோகம் செய்தது. ஈழத்தமிழர் படுகொலைக்கு உதவியது மிகவும் கண்டனத்திற்கு உரியது.
வைகோ அவர்கள் தமிழர்களுக்காகப் பாடுபடுகிறார். அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நான் துணையாக இருப்பேன். என் உயிர் உள்ள மட்டும்
வைகோவுக்கும், தமிழர்களுக்கும் என்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி பாடுபடுவேன் என்றார் ராம் ஜேத்மலானி.
நீதிபதி ராஜேந்திர சச்சார் பேசுகையில், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது, அந்த அரசே குண்டுவீசிக் கொன்றது மிகவும் கொடுமை ஆகும். ஐ.நா. மன்றமும் தன் கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்றார்.
குல்திப் நய்யார் பேசுகையில், தங்கள் உரிமைகளுக்காக மக்கள் போராடும்போது, கொடிய அடக்குமுறையை எதிர்த்து ஆயுதம் ஏந்த நேர்கிறது. அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. பகத்சிங்கை பயங்கரவாதி என்று குற்றம் சாட்ட முடியுமா? தமிழர்களுக்காக வைகோ பாடுபட்டு வருகிறார் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மதிமுக பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோரும், டெல்லி மாநில அமைப்பாளர் பழனிக்குமார், டெல்லிவாழ் தமிழர்களும், மாணவர்களும், பிறமொழி பேசுவோரும் பங்கு ஏற்றனர். அனைவருக்கும் நூலும், குறுந்தட்டும் வழங்கப்பட்டது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications