இறுதிப் போரில் இலங்கைக்கு இந்தியா செய்த உதவிகள் என்ன?: விசாரணைக் கமிஷன் கோரும் வைகோ

வைகோவின் "ஈழத்தில் இனக்கொலை- இதயத்தில் ரத்தம்" என்ற நூலின் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பதிப்புகளுடன் இலங்கை போர் தொடர்பான சிடி ஆகியவற்றை வெளியிடும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான ராம்ஜெத்மலானி தலைமை வகித்தார்.
"ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் ரத்தம்' நூலை டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் வெளியிட மூத்த எழுத்தாளர் குல்தீப் நய்யார் பெற்றுக் கொண்டார்.
விசாரணைக் கமிஷன்- வைகோ
இந்நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், 2009-ம் ஆண்டு போரில் இலங்கைக்கு ரேடார் கருவிகள், ராணுவ உதவி உள்ளிட்டவற்றை இந்திய அரசு வழங்கியது. இது நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இதை இலங்கை அரசும் தெரிவித்திருக்கிறது. போருக்குப் பிறகு தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் பெருமளவில் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழர்களின் நியாயமான கோரிக்கையான தனி அரசாங்கத்துடன் கூடிய தேசம் அமைக்க வேண்டும். இந்த பொது வாக்கெடுப்பை சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும். போரின் போது இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு வழங்கிய உதவிகள் தொடர்பாக இந்தியாவில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும என்றார் அவர்,
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications