Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹாஜிமஸ்தான், ஹர்சத் மேத்தா, எதியூரப்பா, கனிமொழி... நீளும் ராம் ஜெத்மலானியின் 'கிளையன்ட்' லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

Ramjethmalani
டெல்லி: "ஊழல்" குற்றச்சாட்டுக்குள்ளாகிவிட்ட நிதின் கத்காரி, பாஜகவின் தலைவர் பதவியிலிருந்து விலகியாக வேண்டும் என்று கலகக் குரல் எழுப்பி வருகிறார் அக்கட்சியின் மூத்த தலைவர் ராம்ஜெத்மலானி. ஆனால் நாட்டை உலுக்கிய ஊழல்கள் மற்றும் சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்காக ஆஜராகி வரும் ராம்ஜெத்மலானி ஊழலைப் பற்றி பேசுவதா? என்கிறது எதிர்தரப்பு. அப்படி எந்த மாதிரி வழக்குகளில் ராம்ஜெத்மலானி ஆஜராகியிருக்கிறார்..

ஹாஜிமஸ்தான்

தமிழகத்தைச் சேர்ந்த ஹாஜிமஸ்தான், மும்பை நிழல் உலக தாதாக்களின் 'காட்பாதர்'... நாடறிந்த மற்றொரு நிழல் உலக நாயகனாக 'வரதாபாய்'க்கு சற்றே சீனியர்... ஹாஜி மஸ்தான் மீதான பல வழக்குகளில் அவருக்காக ஆஜராகி வாதாடியவர்தான் தி கிரேட் ராம்ஜெத்மலானி

ஹர்சத் மேத்தா

1990களில் இந்தியாவை உலுக்கிய ரூ5 ஆயிரம் கோடி பங்குச் சந்தை ஊழலில் சிக்கியவர் ஹர்சத் மேத்தா. பங்குச் சந்தை ஊழல் வழக்கில் இருந்த தம்மை விடுவிக்க அப்போதைய பிரதமர் பி.வி. நரசிமராவுக்கு ரூ1 கோடி லஞ்சம் கொடுத்தேன் என்று பகிரங்கமாக கூறியிருந்தார். இந்த மனிதருக்கு ஆஜரானவரும் சாட்சாத் ராம்ஜெத்மலானியேதான்!

இந்திரா, ராஜிவ் கொலை வழக்குகள்

1984-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சீக்கியர்களுக்காக ஆஜரானார்! 1991-ம் ஆண்டு இந்திரா காந்தி மகனான முன்னாள் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்காகவும் ஆஜராகிக் கொண்டு இருக்கிறார் ராம்ஜெத்ம்லானி!

இதேபோல் நாடாளுமன்றத் தாக்குதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் அப்சல் குருவுக்கும் இவரே 'லாயர்'!

அத்வானி, எதியூரப்பா, கனிமொழி, ஜெகன்

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஊழல் வழக்குகளிலும் ராம்ஜெத்மலானியே ஆஜராகி இருக்கிறார். பாஜக மூத்த தலைவர் அத்வானி மீதான ஹவலா ஊழல் வழக்கில் அத்வானிக்காக ஆஜரானவர் ராம்ஜெத்மலானிதான்! எதியூரப்பா மீதான சுரங்க முறைகேடு, கனிமொழி மீதான 2ஜி ஊழல் வழக்கு, ஜெகன்மோகன் ரெட்டி மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு ஆகியவற்றுக்கும் அய்யா ராம்ஜெத்மலானியே ஆஜர்!

பிரபல கொலை வழக்குகள்

இளம்பெண் ஜெஸிகா லாலை எரித்து கொன்ற மனுஷர்மா, குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் சிக்கிய அமித்ஷா, அஜித்ஜோகியின் மகன் அமித் ஜோகி மீதான கொலை வழக்கு ஆகியவற்றிலும் குற்றம்சாட்டப்பட்டோருக்காக ஆஜராகியவரும் ராம்ஜெத்மலானிதான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+