சென்னையில் 10 கிமீ தொலைவில் பெண் காரில் எரித்து கொலை, வாலிபர் கழுத்தறுத்து கொலை
சென்னை: சென்னையில் இளம்பெண் ஒருவர் காருடன் எரித்துக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் உள்ள புனித ஜான் பள்ளி அருகில் நேற்று இரவு 1 மணி அளவில் கார் ஒன்று திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த பள்ளி காவலாளிகள் இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு வீரர்களும், நீலாங்கரை போலீசாரும் அங்கு சென்றனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்துவிட்டது. காருக்குள் டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் பெண் ஒருவரின் உடல் எரிந்து எலும்புக்கூடு மட்டும் இருந்தது. அந்த பெண்ணுக்கு 20 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். கார் நம்பர் பிளேட் முற்றிலுமாக எரிந்துவிட்டதால் அது யாருடைய கார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
யாரோ அந்த பெண்ணை கொலை செய்து உடலை காரில் கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்த கொலையை செய்தவர்களை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலாங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு யாராவது காணாமல் போயுள்ளார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் நடந்த 10 கிமீ தொலைவில் உள்ள கோவளம் குன்னூர்காடு பகுதியில் பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு செல்லும் வழியில் இன்று காலை 25-30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்தார். லுங்கியும், வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்த அவரை யாரோ கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
10 கிமீ தொலைவில் ஒரு ஆணும், பெண்ணும் கொல்லப்பட்டுள்ளனர். ஏதோ ஒரு கும்பல் தான் அவர்களை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications