2013ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்: கோல்ட்மேன் சேக்ஸ்
மும்பை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2013ம் ஆண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு அமைப்பான கோல்ட்மேன் சேக்ஸ் கணித்துள்ளது.
இந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.4 சதவீதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட 9 சதவீத வளர்ச்சியைத் தொட்ட இந்தியா கடந்த 3 ஆண்டுகளாக தடுமாறிக் கொண்டுள்ளது.
இதற்கு உள்நாட்டுக் காரணங்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் தொடர்ந்து வரும் பொருளாதாரத் தேக்கமுமே காரணமாகக் கூறப்படுகின்றன.
இந் நிலையில் சமீபத்தில் மத்திய அரசு எடுத்த சில அதிரடி பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, இந்திய வளர்ச்சி அடுத்த ஆண்டு 6.5 சதவீதத்தை எட்டும் என்றும், 2014ம் ஆண்டில் இது 7.2 சதவீதமாக உயரும் என்று கோல்ட்மேன் சேக்ஸ் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு சதவீத வளர்ச்சியும் கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இதைப் படித்தால், பொருளாதார வளர்ச்சியின் தாக்கத்தை நாம் நன்றாக உணர முடியும்.
நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.5% ஆக அதிகரிப்பு:
இதற்கிடையே இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை இந்த நிதியாண்டில் 3.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகும்.
நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2.5 சதவீதம் வரை இருந்தால் தாங்க முடியும். ஆனால், பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருப்பது கவலை தரும் விஷயமாகும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications