குஜராத்தில் ராகுல் காந்தி பிரசாரம் செய்யப் போகிறாராம்.. அறிவித்தது காங்கிரஸ்

குஜராத் பிரசாரத்திற்கு ராகுல் காந்தி வருவாரா, மாட்டாரா என்பது பெரும் விவாத விஷயமாகி விட்டது. மோடியை எதிர்த்து எப்படி ராகுல் காந்தி பிரசாரம் செய்வார், என்ன சொல்லி பிரசாரம் செய்வார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
இந்தநிலையில், குஜராத் பிரசாரத்திற்கு ராகுல் காந்தி வருவதை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. டிசம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ள முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட 40 ஸ்டார் பிரசாரகர்கள் காங்கிரஸ் சார்பில் பேசப் போகிறார்களாம்.
இந்த பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயணன் மீனா, முன்னாள் கேப்டனும் எம்பியுமான அஸாருதீன், சஞ்சய் தத், அகமது படேல், சுஷில் குமார் ஷிண்டே, சல்மான் குர்ஷித், குலாம் நபி ஆசாத், சி.பி.ஜோஷி, ராஜ் பாபர், சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகியோரும் பிரசாரம் செய்கின்றனர்.
அதேபோல டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான், ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோரும் பிரசாரம் செய்யவுள்ளனர்.
இவர்கள் போக ஏராளமான உள்ளூர் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
-
கைமாறிய 12 வருட மனைவி.. குஜராத் கணவர் தந்த புகாரில் செம ட்விஸ்ட்.. அலறியடித்து ஓடிய 10 பேர் -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications