எப்.டி.ஐ: ஓட்டெடுப்புக்கு ஓகே சொன்னதால் லோக்சபாவில் அமைதி- ராஜ்யசபாவில் அமளி!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் எந்த அலுவலையும் மேற்கொள்ள முடியாமல் போனது! தற்போதைய குளிர்கால கூட்டத் தொடருக்கும் அதே கதி ஏற்படும் என்ற நிலைமைதான் முதல் 4 நாட்கள் நீடித்தது! அன்னிய முதலீடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை இந்த 4 நாட்களும் முடக்கி வைத்திருந்தன! கூட்டணிக் கட்சிகளே இந்த விவகாரத்தில் ஆதரவு தராத நிலையில் மத்திய அரசு கையைப் பிசைந்து கொண்டிருந்தது!
இந்நிலையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் அரசை எதிர்த்து வந்த திமுகவை ஒருவழியாக தாஜா செய்தது மத்திய அரசு! இதைத் தொடர்ந்து அரசுக்கு திமுக ஆதரவு உண்டு என்று அறிவிக்கப்பட்டதுதான் தாமதம்! உடனே வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு மத்திய அரசும் தயார் என்று அறிவிக்கப்பட்டது!
இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடுவதற்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜை உள்துறை அமைச்சரும் அவை முன்னவருமான சுஷில்குமார் ஷிண்டே சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து சுஷ்மா ஸ்வராஜ், மக்களவைத் தலைவர் மீராகுமாரை சந்தித்தார்.
மக்களவையில்...
பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளும் கூடின. மக்களவையில், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதி தொடர்பாக 184-வது விதியின் கீழ் விவாதம் நடத்த அனுமதிக்கப்படும் என்று மீராகுமார் அறிவித்தார். இதை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார். இதைத் தொடர்ந்து மக்களவை நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற்றன.
மாநிலங்களவையில்...
மாநிலங்களவை கூடியதும் பாஜக எம்.பிக்கள், வெங்கையா நாயுடு ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் அன்னிய முதலீடு பிரச்சினையை எழுப்பினர். அப்போது பாஜக உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். திரிணாமுல் காங்கிரசாரும் இதே விவகாரத்தைக் கிளப்பினர். ஆனால் சமாஜ்வாடி கட்சி எம்.பிக்களோ, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு அரசுப் பணியில் பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இந்த அமளிகளால் அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பகல் 12 மணிக்கு கூடிய போது இடஒதுக்கீடு பிரச்சனையால் அமளி நீடித்தது. இதனால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய அரசைப் பொறுத்தவரையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் என்பது மக்களவைக்கு மட்டுமே என்கிறது. மாநிலங்களவையில் போதுமான ஆதரவு இல்லை என்பதால் மாநிலங்களவையில் அன்னிய முதலீடு விவகாரத்தில் விவாதத்துக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் விடுவதாகவும் இல்லை என்பதால் அமளி தொடர்கிறது!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications