பிரதமராக நரேந்திர மோடி தகுதியானவர்: சுஸ்மா ஸ்வராஜ்
Subscribe to Oneindia Tamil

குஜராத் மாநில சட்டசபை தேர்தலையொட்டி வதேதராவில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில் பேசிய சுஷ்மா, குஜராத்தின் வளர்ச்சிக்கு நரேந்திர மோடி பெரிதும் பாடுபட்டுள்ளார். நாட்டின் பிரதமர் பதவிக்கு மோடி பொருத்தமானவர். இந்த விஷயத்தில் மாறுபாடான கருத்து எதுவும் கிடையாது என்றார்.
பாரதிய ஜனதாவில் யார் பிரதமர் என்பது அறிவிக்கப்படாவிட்டாலும் நரேந்திர மோடியை மையமாக வைத்து சர்ச்சைகள் வெடிப்பது வழக்கம். பாரதிய ஜனதாவில் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, நரேந்திர மோடி என பலரும் பிரதமர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது நரேந்திர மோடிக்கு போட்டி வேட்பாளராக கருதப்படும் சுஷ்மா ஸ்வராஜ் வெளிப்படையாக மோடிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications