கலெக்டர் கார் விபத்தில் உயிரிழந்த 'டபேதார்' முனிராஜ் - 11 குழந்தைகளுக்குத் தந்தை!

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக இருந்து வருபவர் பூஜா குல்கர்னி. இவர் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக தனது நேர்முக எழுத்தர் ஜெயசங்கர், டபேதார் முனிராஜ் ஆகியோருடன் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள மோரூர் என்ற ஊருக்குக் காரில் போய்க் கொண்டிருந்தார். காரை சிவானந்தம் ஓட்டினார்.
இவர்கள் கிருஷ்ணகிகரி சேலம் நெடுஞ்சாலையில், நாமஸ் பாறை என்ற இடத்தில் சென்றபோது திடீரென கலெக்டரின் காரை இன்னொரு கார் பின்னாலிருந்து வேகமாக முந்த முயன்றது. அப்போது அந்தக் காரின் பேனட் பகுதியானது, கலெக்டரின் காரை சுமார் 10 அடிக்கு இழுத்துச் சென்று தள்ளி விட்டது. இதில் நிலை தடுமாறிய கலெக்டரின் கார், முன்னால் சாலையோரமாக நின்றிருந்த அரசுப் பேருந்தின் பின்னால் போய் பலமாக மோதி விட்டது.
இதில் காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்து மக்கள் ஓடி வந்தனர். விபத்துக்குள்ளானது கலெக்டரின் கார் என்று தெரிந்ததும் மக்கள் ஓடி வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். போலீஸாரும் விரைந்து வந்தனர்.
கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே டபேதார் முனிராஜ் உயிரிழந்தார். மற்றவர்களில் கலெக்டர் பூஜா குல்கர்னியும், ஜெயசங்கரும் முதலுதவிக்குப் பின்னர் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
முனிராஜின் மரணத்தால் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு ஊழியர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் உதயமானபோது முதல் கலெக்டராக இருந்தவர் மங்கத்ராம் சர்மா. இவரிடம் டபேதாக இருந்தார் முனிராஜ். அன்று முதல் இவர்தான் கலெக்டரின் டபேதாராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
6 கலெக்டர்கள் மாறி விட்டபோதும் முனிராஜ் தொடர்ந்து அதே பணியிடத்தில் நீடித்து வந்தார். இதனால் மாவட்ட அரசு ஊழியர்கள் அனைவருக்குமே இவர் நல்ல அறிமுகமான முகமாக இருந்து வந்தார். இவர் பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் ஒரு வருடமே உள்ளதாம்.
உயிரிழந்த முனிராஜுக்கு 2 மனைவிகளும், 11 குழந்தைகளும் உள்ளனராம். முனிராஜின் மரணம் குறித்து அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு ஊழியர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதபடி மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications