இலங்கை நடத்தும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கிறது கனடா
Subscribe to Oneindia Tamil
டொரண்டோ: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இலங்கையில் மனித உரிமைகள் மேம்படவில்லை. இந்த நிலையில் அங்கு நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டோம்.
இலங்கை தலைமை நீதிபதி மீதான இம்பீச்மெண்ட் தொடர்பாக கவனித்து வருகிறோம். இலங்கை நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.
அரசியல் நல்லிணக்கம், மனித உரிமை மேம்பாடு போன்றவற்றை கடைபிடிக்காத இலங்கையில் 2013ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications