தமிழகத்துக்கு காவிரி நீர் தர முடியாது-கர்நாடகம் வாதம்: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

காவிரி நதிநீர் விவகாரத்தில் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 29-ந் தேதியன்று பெங்களூர் சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை நேரில் சந்தித்துப் பேசினார். ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
உச்சநீதிமன்றத்தில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு மாநில அரசுகளையும் எவ்வளவு தண்ணீர் தேவை என்ற அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் தரப்பில் 30 டி.எம்.சி. நீர் தேவை என்று கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகத் தரப்பிலோ போதுமான நீரில்லை என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரு அறிக்கைகள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் தாக்கல் செய்த அறிக்கைகள் மீது இரு மாநில அரசின் வழக்கறிஞர்களும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
கர்நாடகம் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், தமிழகம் கேட்கும் குறைந்தபட்ச நீரைக் கூட தர முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம் என்றார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications