5 ஆண்டுகளில் 50 லட்சம் வீடுகள்... 30 லட்சம் பெண்களுக்கு உதவித் தொகை: மோடி தேர்தல் வாக்குறுதி

Subscribe to Oneindia Tamil

Narendra Modi
அகமதாபாத்: மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் ஏழைகளுக்கு 5 வருடத்தில் 50 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதல்வர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.அகமதாபாத்தில் பாஜகவின் மூத்த தலைவரான அருண்ஜேட்லி முன்னிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்;

- மாநிலத்தின் அனைத்து குடிமக்களும் குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவர்

- அடுத்த 5 ஆண்டுகளில் 50 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். கிராமப் புறங்களில் 28 லட்சம் வீடுகளும் நகரப் பகுதியில் 22 லட்சம் வீடுகளும் கட்டப்படும்.

- கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய நடுத்தர வர்தக்கத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

- அடுத்த ஐந்து ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தை ஜவுளித்துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்குவோம்

- வறட்சி மிகுந்த செளராஷ்டிரா பகுதியில் உள்ள அனைத்து அனைகளுக்கும் அடுத்த 3 ஆண்டுகளில் நர்மதை ஆற்று நீர் கொண்டு செல்லப்பட்ம்.

- வரும் 5 ஆண்டுகளில் 16 லட்சம் ஹெக்டேர் பரப்பு விளைநிலமாக்கப்படும்

- விவசாயிகளின் கடன்களுக்கான வட்டியை அரசு பகிர்ந்து கொள்ளும்

- அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் விளைபொருட்களுக்கான குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.

- மின் உற்பத்தியில் மின்மிகு மாநிலமாக இருக்கும் குஜராத், அடுத்த 5 ஆண்டுகளில் தற்போதைய மின் உற்பத்தியை இருமடங்காக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

- 30 லட்சம் பெண்களுக்கு உதவித் தொகை

- மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் குஜராத் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

- சூரத், ராஜ்கோட், வதோதராவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் அமைக்கப்படும்

- சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கான வங்கிக் கடனுக்கு அரசு உதவும்

என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+