நரேந்திர மோடியின் சொத்து ரூ. 1 கோடி!

குஜராத் சட்டசபைத் தேர்தலில் மணிநகர் தொகுதியிலிருந்து மீண்டும் போட்டியிடுகிறார் மோடி. இதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தனது சொத்து மதிப்பையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது சொத்து மதிப்பு 2007ம் ஆண்டு ரூ. 40 லட்சமாக இருந்தது. தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ. 1 கோடியைத் தாண்டியுள்ளது.
காந்திநகர் செக்டார் ஒன்றில் அவர் ரூ. 1.30 லட்சத்துக்கு ஒரு நிலம் வாங்கியுள்ளார். அதன் சில ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பு ரூ. 30 லட்சமாக இருந்தது. தற்போது அதன் மார்க்கெட் மதிப்பு ரூ. 1 கோடியாக உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
அந்த நிலத்தில் சீரமைப்புப் பணிகள் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 208க்கு நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவை தவிர ரூ. 33 லட்சத்து 42 ஆயிரத்து 842 மதிப்புக்கு வங்கி முதலீடுகள், தங்க மோதிரங்கள் உள்ளிட்டவையும் மோடியிடம் உள்ளன.
அவரிடம் ஸ்டேட் பாங்க் இந்தியாவில் ரூ. 22 லட்சத்து 59 ஆயிரத்து 226க்கு நிரந்தர வைப்புத் தொகை கணக்கு உள்ளது.
இதுபோக அவரது வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ. 4 லட்சத்து 24 ஆயிரத்து 836 உள்ளதாம்.
2007ம் ஆண்டு மோடியிடம் ரூ. 8 லட்சம் மற்றும் 55 ஆயிரத்து 651 ரூபாய்க்கு வங்கி முதலீடுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக 2 வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளார் மோடி. அதில் ராஜ்கோட் நாக்ரிக் சகாரி வங்கியில் ரூ. 30,347 ரூபாய் இருப்பு உள்ளது. மணி நகர் எஸ்.பி.ஐ. கிளையில் ரூ. 10,000 வைத்துள்ளார்.
மேலும் இன்பிராஸ்டிக்சர் பாண்டுகளில் ரூ. 20,000 முதலீடு செய்துள்ளார் மோடி. சமீபத்தில் ஐடி ரிட்டர்னாக ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 630ஐ செலுத்தியுள்ளார் மோடி. இதில் ரூ. 54,403 ஐடி ரீபன்ட் தொகையாகும். அது இன்னும் வரவில்லையாம். அதேபோல சிலருக்கு அவர் 14 ஆயிரத்து 363 ரூபாய் கடனாக கொடுத்துள்ளாராம். அது இன்னும் திரும்ப வரவில்லையாம்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications