அதிமுகவும் தயாராகிறது: டிசம்பர் 6 முதல் ஆலோசனைக் கூட்டம்: ஜெ. அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை அதிமுக நாடாளுமன்ற ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டக் கழகங்களின் செயல்பாடுகளை ஊக்குவித்திடும் வகையிலும், கழக பணிகள் மற்றும் மக்கள் பணிகளை ஆற்றுவது குறித்தும் இதுவரை 28 நாடாளுமன்ற தொகுதிகளில் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. மீதமுள்ள 12 நாடாளுமன்ற தொகுதிகளில் டிசம்பர் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும்.

அதன்படி, டிசம்பர் 6ம் தேதி (வியாழன்) ​காலை அரக்கோணம், மாலை வேலூர்.

டிசம்பர் 7ம் தேதி(வெள்ளி) ​காலை ஆரணி, மாலை திருவண்ணாமலை.

டிசம்பர் 8ம் தேதி(சனி) காஞ்சீபுரம் (தனி).

டிசம்பரம் 14ம் தேதி(வெள்ளி) மத்திய சென்னை.

டிசம்பர் 15ம் தேதி(சனி) ​காலை சேலம், மாலை நாமக்கல்.

டிசம்பர் 16ம் தேதி(ஞாயிறு) ​காலை கள்ளக்குறிச்சி, மாலை விழுப்புரம் (தனி).

டிசம்பர் 22ம் தேதி(சனி) ​காலை நீலநீலகிரி (தனி), மாலை திருப்பூர்

மேற்கண்ட தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டக் கழக செயலாளர்களும், மாவட்ட கழக நிர்வாகிகளும், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உட்பட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும். இந்த ஆலோசனை கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கு கட்சியினரைத் தயார்படுத்தும் வேலையில் திமுகவும் தீவிரமாக இறங்கவுள்ளது. டிசம்பர் 15ம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+