இந்தியாவில் வாழ 'பெங்களூர்' தான் பெஸ்ட்
டெல்லி: மெர்சர் என்னும் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் இந்தியாவில் வாழ சிறந்த நகரங்களில் பெங்களூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மெர்சர் என்னும் நிறுவனம் உலகில் வாழ சிறந்த நகரங்கள் எவை, எவை என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. அதில் வியன்னா முதலிடத்தையும், ஜுரிச் மற்றும் ஆக்லாந்து 2வது மற்றும் 3 வது இடங்களையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் பெங்களூர், டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

ஐடி நகரம் பெங்களூர்
ஐடி கம்பெனிகள் அதிகமுள்ள பெங்களூர் சர்வதேச பட்டியலில் 139வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் இந்தியாவில் வாழ சிறந்த நகரங்களில் முதலிடத்தில் உள்ளது.

தலைநகர் டெல்லி
சர்வதேச பட்டியலில் 143வது இடம் பிடித்துள்ள தலைநகர் டெல்லி இந்திய நகரங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை தான் பிடித்துள்ளது. இத்தனைக்கும் பெங்களூரை விட டெல்லியில் தான் உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக உள்ளது.

3வது இடத்தில் மும்பை
சர்வதேச பட்டியலில் 146வது இடத்தில் உள்ள மும்பை வாழச் சிறந்த இந்திய நகரங்களில் 3வது இடத்தில் உள்ளது. அது சரி ஒரு மழை பெய்தால் வெள்ளக்காடாகிவிடுமே.

சிங்கார சென்னைக்கு 4வது இடமே
சிங்கார சென்னைக்கு சர்வதேச பட்டியலில் 150வது இடமும், இந்திய பட்டியலில் 4வது இடமும் கிடைத்துள்ளது. சென்னை என்றாலே மண்டையைப் பிளக்கும் வெயில் தானே பலருக்கும் நினைவுக்கு வரும்.

ஓவர் கிரவுடட் கொல்கத்தா
எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமாக இருக்கும் கொல்கத்தாவுக்கு சர்வதேச பட்டியலில் 151வது இடமும், இந்திய பட்டியலில் 5வது இடமும் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications