ராணுவத்துக்காகவே ஸ்பெஷலாக 'மினி' விமானப்படை வருகிறது!
டெல்லி: இந்தியா விமானப்படையிடம் அதி நவீன கனரக தாக்குதல் லெஹிகாப்டர்களை கேட்டுக் கேட்டு அலுத்து ஒரு வழியாக அதில் வென்றுள்ள இந்திய ராணுவம், விரைவில் இந்த ஹெலிகாப்டர்களை வைத்து ஒரு குட்டி விமானப்படையைப் நிர்மானிக்கவுள்ளதாம்.

ராணுவத்துக்காக தனி விமானப்படை வீரர்கள்
புதிய திட்டத்தின்படி ராணுவத்தின் விமானப் படைப் பிரிவுக்காகவே பிரத்யேகமாக விமானப்படை வீரர்களை ஒதுக்கவுள்ளனர். இதற்கான ஒப்புதலை ராணுவத் தலைமைத் தளபதி பிக்ரம் சிங் சமீபத்தில்தான் கொடுத்தார்.

குட்டி ஹெலிகாப்டர்களை ராணுவமே 'ஓட்டும்'
அதன்படி சிறிய ரக மற்றும் கனரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை இந்தப் படைப் பிரிவினரே கையாளுவார்கள். மேலும் வான் கண்காணிப்பு போன்றவற்றையும் இவர்களே மேற்கொள்வார்கள்.

4வது இடம்
ஏற்கனவே அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் இப்படி ராணுவத்துக்காகவே தனியாக ஒரு குட்டி விமானப்படைப் பிரிவு உள்ளது. அந்த வரிசையில் தற்போது நாமும் சேருகிறோம்.

ஏற்கனவே லடாக்கில் ஒரு படைப் பிரிவு
ராணுவத்துக்குள்ளாக ஒரு விமானப்படைப் பிரிவை தொடங்கும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 75,000 வீரர்கள் இடம் பெறவுள்ளனர். ஏற்கனவே லடாக்கில் ஒரு பிரிவை தொடங்கி நிறுத்தி வைத்து விட்டது ராணுவம்.

250 இலகு ரக ஹெலிகாப்டர்கள்
தற்போது ராணுவ விமானப் படைப் பிரிவிடம் 250 இலகு ரக ஹெலிகாப்டர்கள், அதாவது துருவ், சீட்டா, சேட்டக் ஆகியவை உள்ளன. அதேசமயம், தாக்குதல் விஷயத்தை இதுவரை விமானப்படை மட்டுமே பார்த்து வருகிறது. அதில் ஒரு பாதிப் பணியைத்தான் தற்போது ராணுவத்தின் விமானப் படைப் பிரிவு பெறப் போகிறது.

ராணுவம் கேட்பது என்ன?
ஒரு தாக்குதல் ஹெலிகாப்டர் படைப் பிரிவை (10-12 ஹெலிகாப்டர்கள் அடங்கியது) தங்களுக்கு் தருமாறு ராணுவம் கோரியுள்ளது. இது போக 114 ருத்ரா தாக்குதல் ஹெலிகாப்டர்களை பின்னர் இணைத்துக் கொள்ள ரா ணுவம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் ராணுவத்தின் 13 படைப் பிரிவுகளுக்கும் தனித் தனியாக ஒரு விமானப்படைப் பிரிவு இருக்கும் வகையில், நீண்ட காலத் திட்டத்தையும் ராணுவம் வைத்துள்ளதாம்.

தற்காலிகமாக 10,000 வீரர்கள்
ராணுவத்தின் விமானப் படைப் பிரிவில் தற்போது தற்காலிகமாக 10,000 பேர் உள்ளனர். ஆனால் இவர்களில் பாதிப் பேர்தான் வீரர்கள். மற்றவர்கள் தொழில்நுட்ப ஊழியர்கள்தான். எனவே 5000 பேரை டெபுடேஷனில் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இங்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம். இவர்களுக்கு விருப்பம் இருந்தால் இங்கேயே நிரந்தரமாக இருந்து விடலாமாம்.

கவலையில் விமானப்படை
இப்படி ராணுவத்தில் கொண்டு போய் விமானப்படைப் பிரிவை நுழைப்பதால் நடைமுறையில் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று விமானப்படை கவலை தெரிவித்துள்ளதாம். தேவையில்லாத வீண் செலவுகளும் ஏற்படும் என்பதும் அதன் கவலைகளில் ஒன்று.

தேவையில்லாத கவலை.. ராணுவம் பதிலடி
ஆனால் இது தேவையில்லாத கவலை. எங்களுக்கென்று உருவாகவுள்ள விமானப்படையின் வேலைகள் குறைவுதான். அதேசமயம், விமானப்படை தனது வழக்கமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள நாங்கள் இடையூறாக இருக்கப் போவதில்லை என்று கூறுகிறது ராணுவம்.
நாம ஒற்றுமையாக இருந்து எதிரிகளை அடிச்சுக் காலி செய்வதுதான் முக்கியம்... நமக்குள்ள அடிச்சுக்காம இருந்தா சரிதான்...
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications