அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில் சம்பத்: கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி தந்தார் ஜெ.!

Subscribe to Oneindia Tamil

Nanjil Sampath
சென்னை: மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார்.

மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபல பேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார். வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டென ரத்து செய்யப்பட்டன.

ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்கப் போவதாகவும் கூட செய்திகள் வலம் வந்தன. திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.

இன்று காலை திடீரென போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு சென்ற சம்பத் அதிமுகவிவில் சேர்ந்தார். அவருக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி:

அதிமுகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் நாஞ்சில் சம்பத் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், முதல்வரை சந்தித்து அதிமுகவில் இணைந்ததும் கட்சியின் கொள்கை பரப்புத் துணை செயலாளராக நியமிக்கப்பட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வந்த உணர்வில் உள்ளேன். என்னை பார்த்ததும், சிறந்த சொற்பொழிவாளர் என்று முதல்வர் பாராட்டினார். அவருக்கு நன்றி தெரிவித்த நான் நீங்கள் பெருமைப்படும்படி நடந்து கொள்வேன் என்று தெரிவித்தேன் என்றார்.

இனி நாஞ்சில் சம்பத் அதிமுகவின் பிரச்சார பீரங்கி!

அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக தம்பிதுரை உள்ளார். கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியிலிருந்து பழ. கருப்பையா எம்.எல்.ஏ. கடந்த ஜனவரி மாதம் நீக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது. இந் நிலையில், கொள்கை பரப்பு துணைச் செயலாளராக சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+