கருமம், கருமம்.. ரூபாய் நோட்டை எடுத்து 'துடைத்த' இங்கிலாந்து கால்பந்து வீரர்
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு கால்பந்து வீரர் டாய்லெட் போய் விட்டு டிஷூ பேப்பருக்குப் பதில் ரூபாய் நோட்டை எடுத்து துடைத்துக் கொண்டார். இந்தப் படத்தை அவர் வெளியிட இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
அந்த கால்பந்து வீரரின் பெயர் லியாம் ரிட்ஜ்வெல். 28 வயதான இவர் வெஸ்ட் ப்ரோமியான் அல்பியான் கால்பந்து கிளப்பைச் சேர்ந்த அணியின் கால்பந்து வீரர் ஆவார். தடுப்பாட்டக்காரரான இவர் ஒரு சீரியஸான சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பிர்மிங்காமில் உள்ள தனது வீட்டில் டாய்லெட் போன பின்னர் டிஷூ பேப்பரை எடுத்துத் துடைப்பதற்குப் பதில், 20 பவுண்டு ரூபாய் நோட்டை எடுத்து துடைத்துள்ளார். அதை புகைப்படமாகவும் வெளியிட்டுள்ளார். இதுதான் பஞ்சாயத்தைக் கூட்டி விட்டது.
அதில் ரூபாய் நோட்டை எடுத்து துடைத்த நிலையில் போஸ் கொடுத்துள்ளா லியாம். டிரவுசரைக் கழற்றிய நிலையில் பாதி எழுந்த நிலையில் காணப்படுகிறார் லியாம். அவரைச் சுற்றிலும் ரூபாய் நோட்டுக்கள் சிதறிக் கிடக்கின்றன. அத்தனையும் துடைப்பதற்காக அவர் வைத்துள்ளார் என்று தெரிகிறது. இது அவரது ரசிகர்களிடயே பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீரர் வாரம் 20 ஆயிரம் பவுண்டு வருமானம் ஈட்டக் கூடிய முன்னணி வீரர் ஆவார். இவரது வீட்டின் மதிப்பு 10.5 லட்சம் பவுண்டு மதிப்பிலானதாகும்.
தனது ஆய் படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் லியாம். ஆனால் ரசிகர்களோ லியோம் ஒரு மிகப் பெரிய முட்டாள் என்று விமர்சித்து வருகின்றனர்.
'டிஷூ' பேப்பர்னாலே எல்லா ஊரிலும் பஞ்சாயத்துதான் போல...!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications