தாஜ்மஹாலில் பாக். உள்துறை அமைச்சரின் பிறந்தநாளைக் கொண்டாட தடபுடல் ஏற்பாடு
Subscribe to Oneindia Tamil

இந்தியா பாகிஸ்தான் இடையே புதிய விசா ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத்தாக உள்ளது. இதற்காக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் வரும் 11ம் தேதி இந்தியா வருகிறார். 13ம் தேதி வரை இந்தியாவில் இருக்கும் அவருக்கு வரும் 12ம் தேதி பிறந்த நாளாகும்.
இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் ரஹ்மான் மாலிக்கின் பிறந்தநாளை தாஜ்மஹாலில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து ரஹ்மான் மாலிக்கிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் இந்திய அரசு ஏற்பாடு செய்யும் விழாவில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் பெரிய அளவில் நடந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications