தமிழக- கேரள எல்லையில் மோசமான சாலை: ஐயப்ப பக்தர்கள் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழக-கேரள எல்லையான புளியரை சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அவ்வழியே செல்லும் ஐயப்ப பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Roads in TN-Kerala border trouble Iyappa devotees

தமிழகத்தில் இருந்து செங்கோட்டை புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள், நூற்றுக் கணக்கான பேருந்துகள் மற்றும் கார், வேன்கள் செல்கின்றன. தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் இந்த வழியாகத் தான் கேரளாவுக்கு அணிவகுத்து செல்கின்றன. இப்படி புளியரை பாதையில் எப்பொழுது பார்த்தாலும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் பல மாதங்களாக இப்பாதை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த பாதையில் செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் சரக்கு லாரிகள் அவ்வப்போது கவிழ்ந்துவிடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான எஸ் வளைவில் கோவில்பட்டிக்கு மரக்கட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி கவிழ்ந்ததற்கு மோசமான சாலை தான் காரணம்.

இவ்வளவு போக்குவரத்து உள்ள புளியரை பாதையை அரசு சீரமைக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்களும், மக்களும் விரும்புகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+