ரூ.1 கோடி மின் கட்டண பாக்கி: பி.ஆர்.பி. நிறுவனத்தின் ஃபியூஸை பிடுங்கிய மின்வாரியம்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் முறைகேடு செய்தது தொடர்பாக இதுவரை 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பி.ஆர். பழனிச்சாமி மீது மட்டும் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பி.ஆர்.பி. கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக மோசடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோது பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் குவாரிகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி அவைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதற்கிடையே மேலூர் தெற்கு தெருவில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்திற்கு மாதம் 4,200 கிலோவாட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மோசடி புகார்கள் எழுந்த பிறகு இந்த அலுவலகம் செயல்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை ரூ.1 கோடிக்கு மேல் மின் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் மின் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளன.
பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு பண பரிவர்த்தனைகள் செய்ய அனுமதி அளித்துள்ளபோதிலும் மின் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications
