அன்னிய முதலீடு: ராஜ்யசபாவில் அரசை ஆதரித்து வாக்களிப்போம்- மாயாவதி

லோக்சபாவில் நேற்று சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தொடர்பான வாக்கெடுப்பில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன்சமாஜ் ஆகியவை பங்கேற்கவில்லை. இதனால் மத்திய அரசு தப்பியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், சிபிஐயால் இரண்டு கட்சிகளும் மிரட்டப்பட்டதாலேயே அவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அரசைக் காப்பாற்றியிருக்கின்றன என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ராஜ்யசபாவில் இன்று நடைபெற்ற அன்னிய முதலீடு தொடர்பான விவாதத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பேசினார். மாயாவதியின் முழு பேச்சுமே பாஜகவை மிகக் கடுமையாகவே சாடியதாக இருந்தது. சுஷ்மா ஸ்வராஜின் கருத்தை முழுவதுமாக நிராகரித்து மாயாவதி பேசியிருந்தார். சிபிஐ பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இப்படித்தான் மிரட்டலுக்கு பயன்படுத்தியதா என்றும் மாயாவதி கேள்வி எழுப்பினார்.
பாரதிய ஜனதா கட்சிக்கோ அல்லது சிபிஐக்கோ பகுஜன் சமாஜ் கட்சி அச்சப்படாது. எனக்கு எதிராக சிபிஐ அமைப்பை பயன்படுத்தியது பாஜகதான். தாஜ் காரிடார் வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு என்று என் மீது வழக்குகளைப் பாயக் காரணமே பாஜகதான் என்றும் மாயாவதி சாடினார்.
அன்னிய நேரடி முதலீட்டு விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும் என்றும் தமது பேச்சின் முடிவில் மாயாவதி அறிவித்தார்.
மாயாவதியின் சுஷ்மா பற்றிய பேச்சுக்கு பாஜக எம்.பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் பேசிய பேச்சை மாநிலங்களவையில் எப்படி மேற்கோள் காட்டலாம் என்று பாஜக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பகுஜன் சமாஜ் எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் 10 நிமிடம் ஒத்திவைக்க நேரிட்டது. பின்னர் அவை கூடிய போதும் மாயாவதியின் பேச்சுக்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே இருந்தனர்.
-
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications