தனியாரில் கூடுதல் சம்பளம்: டி.ஆர்.டி.ஓவில் இருந்து 700 விஞ்ஞானிகள் ராஜினாமா…!

மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள ஏ.கே.அந்தோனி, ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்திலிருந்து (டிஆர்டிஓ) இந்த ஆண்டு மட்டும் இதுவரை 50 விஞ்ஞானிகள் விலகி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். தனிப்பட்ட அல்லது குடும்ப காரணங்களுக்காக பணியிலிருந்து விலகுவதாக அவர்கள் கூறியுள்ளனர். எனினும், தனியார் நிறுவனங்களில் கூடுதல் சம்பளம் மற்றும் சலுகைகளுடன் வாய்ப்புகள் பெருகி வருவதே இதற்கு முக்கியக் காரணம். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2011 வரை மட்டும் டிஆர்டிஓ-விலிருந்து 637 விஞ்ஞானிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
இலகு ரக ஹெலிகாப்டர் ஆர்டர் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர், அந்த திட்டம் ஒத்தி வைக்கப்படவில்லை என்றும், அது தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பதில் அளித்துள்ளார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள அந்தோனி, இந்திய விமானப் படைக்குத் தேவையான 15 கனரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்ய அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளனர். பரிசோதனையின்போது, நமது விமானப் படைக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இந்த ஹெலிகாப்டரில் உள்ளதால், அதை வாங்க முடிவு செய்யப்பட்டது என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications