வடிவேலு மதிமுகவில் சேரப் போகிறாரா?

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை வடிவேலு ஒரு நடிகராக மட்டுமே வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் விஜயகாந்த்தின் தேமுதிகவுடன், அதிமுக கூட்டணி என்று செய்தி வந்ததுமே அவர் திமுக பக்கம் சாய்ந்தார். கருணாநிதியைச் சந்தித்தார். விஜயகாந்த்துக்கு எதிராக தீவிரப் பிரசாரம் செய்வேன் என்று அறிவித்தார்.
சொன்னது போலவே பிரசாரத்திலும் குதித்தார். கப்பல் கேப்டனா, ராணுவ கேப்டனா என்று ஆரம்பித்து நான் பாஸ்கர் இல்லைண்ணே, பாண்டிண்ணே என்ற நக்கல்வரை விஜயகாந்த்தை வறுத்தெடுத்தார். அய்யோ பரிதாபம்... தேர்தலில் திமுக படுதோல்வியைத் தழுவியது, அதிமுக பெரும் வெற்றி பெற்றது. விஜயகாந்த்தும் எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார்.
தேர்தலுக்குப் பிறகு நிலைமை மாறிப் போனது. அவருக்குப் படம் தர இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் படம் இல்லாமல் போனது. வடிவேலுவும் அலட்டிக் கொள்ளவில்லை. மதுரையோடு போய் நிம்மதியாக ரெஸ்ட் எடுக்க ஆரம்பித்தார்.
இடையில் அவர் அதிமுகவில் சேரப் போவதாக செய்திகள் வந்தன. அதை வடிவேலு மறுத்தார். இந்த நிலையில் தற்போது அவர் மதிமுகவில் சேரப் போவதாக செய்திகள் கிளம்பியுள்ளன.
அதாவது திருச்சியில் நாளை நடைபெறும் நாடாளுமன்றத்தில் வைகோ என்ற நூல் வெளியீட்டு விழாவில் வடிவேலுவும் பங்கேற்பதாக நிகழ்ச்சி அழைப்பிதழில் கூறப்பட்டுள்ளது. இதை வைத்து வடிவேலு மதிமுகவில் சேரப் போவதாக செய்திகள் கிளம்பியுள்ளன.
உண்மை என்னவென்று வடிவேலுவே சொன்னால்தான் உண்டு!
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications