அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

உதகை: தன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த முதல்வர் ஜெயலலிதாவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக உதகை மாவட்ட நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த் இன்று நேரில் ஆஜரானார். அப்போது தேமுதிக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அவதூறு வழக்கு தொடர்ந்த முதல்வரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் முதல்வர் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்பதை எடுத்துரைத்தனர். முதல்வர் ஆஜராகத் தேவையில்லை என்றால் விஜயகாந்தும் ஆஜராகத் தேவையில்லை என்றது தேமுதிக தரப்பு.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரேம் குமார் வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். விஜயகாந்த் சார்பில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 18ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு:

முதல்வர் ஜெயலலிதாவை விருதுநகரில் அவதூறாக பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் 18ம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தேமுதிக சார்பில் விருதுநகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் மேடையில் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் மங்களசாமி ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வேறு ஒரு வழக்கில் விஜயகாந்த் அண்மையில் தான் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+