குஜராத் அரசியலில் பரபரப்பு: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் தலைவர் நர்ஹிரி அமீன்
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற ஒருவார காலமே இருக்கும் நிலையில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் பலம் அளிக்கும் வகையில் மூத்த காங்கிரஸ் தலைவர் நர்ஹரி அமீன் இன்று அக்கட்சியில் ஐக்கியமாகி இருக்கிறார்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜகதான் ஆட்சியைக் கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் வேட்பாளர் பட்டியலில் அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நர்ஹரி அமீன் இன்று முதல்வர் மோடியை நேரில் சந்தித்து தமது ஆதரவாளர்களுடன் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார்.
குஜராத்தின் பட்டேல் சமூகத்தை சேர்ந்த கேசுபாய் பட்டேல் பாரதிய ஜனதா கட்சியை விட்டு வெளியேறி தனிக் கட்சி தொடங்கிவிட்ட கவலையில் இருந்த பாஜகவுக்கு அதே பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த நர்ஹரி அமீனின் வருகை கூடுதல் பலம்தான்! காங்கிரஸ் கட்சியோ செம சோகத்தில் கன்னத்தில் கை வைத்துவிட்டது!
குஜராத் மாநில சட்டசபைக்கு வரும் 13, 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 20- தேதி நடைபெற இருக்கிறது.
-
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு!












Click it and Unblock the Notifications