காவிரி நீர் நாளை மறுநாள் மேட்டூர் 'வரும்'.. கடை மடைக்கு வராது!
மேட்டூர்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே திறந்துவிட்டிருக்கும் 'சொற்ப' நீர் மேட்டூர் அணையை நாளை மறுநாள் வந்தடைந்தாலும் கடை மடைப்பகுதியான நாகப்பட்டினத்துக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் நீண்ட சட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 5-ந்தேதி முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரைத் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்கிறது. இந்த நீர் ஞாயிற்றுக்கிழமையன்று மேட்டூரை வந்தடையும். அங்கிருந்து திருச்சியை இந்த நீர் வந்தடைய 20 மணி நேரமும் கடைமடையான நாகப்பட்டினத்தை வந்தடைய 48 மணிநேரமும் ஆகும்.
திறக்கப்பட்டிருக்கும் இந்த சொற்ப நீரை பூமி உறிஞ்சி, வெப்பத்தில் காணாமல் போய் எஞ்சியது காவிரி டெல்டா பாசனப் பகுதிக்கு வந்தாலும் கடைமடைக்கு போக வாய்ப்பில்லை. டெல்டா பகுதியில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிரை முழுமையாக நனைக்கவும் வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.68 அடியாக இருந்தது. வினாடிக்கு 2 ஆயிரத்து 928 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications