2வது நாளாக குமரி கடலில் சீற்றம், கொந்தளிப்பு: ராட்சத அலையைப் பார்த்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்
குமரி: குமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சீசனையொட்டி எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை முதல் கடல் சீற்றத்துடன் உள்ளது. சீற்றம் ஏற்றபட்ட உடனேயே கடலில் அமைந்திருக்கும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நிறுத்தப்பட்டது.
இன்று 2வது நாளாக கடல் சீற்றம் தொடர்கிறது. இதற்கிடையே அவ்வப்போது மழை பெய்தததால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது 10 அடி முதல் 15 அடி வரை ராட்சத அலைகள் எழுந்தன. கடலின் அழகை ரசிக்கலாம் என்று திரிவேணி சங்கமத்தி்ற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ராட்சத அலைகள் கரையை நோக்கி பாய்ந்து வருவதைப் பார்த்து ஓட்டம் பிடித்தனர்.
இவ்வாறு கடல் சீற்றமாக இருப்பதால் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இன்று காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய படகு சேவை நிறுத்தப்பட்டது. இதனால் கடலில் அமைந்திருக்கும் அந்த 2 இடங்களுக்கும் செல்ல அதிகாலை 5 மணியில் இருந்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் கடல் சீற்றத்தால் கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கீழமணக்குடி, மேலமணக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications