வைகோ நிகழ்ச்சிக்கு வரவில்லை வடிவேலு... தொண்டர்கள் ஏமாற்றம்!

கடந்த 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை கடுமையாக சாடினார். இந்த பிரச்சாரத்தை வேடிக்கைப் பார்க்க மக்கள் எக்கச்சக்கமாக திரண்டனர்.
ஆனால் தேர்தலில் திமுக தோற்றது. வடிவேலு சினிமாவிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இதற்கிடையே, எதிர் எதிர் துருவமாக இருந்த தி.மு.க. - தே.மு.தி.க., ஒரே அணியில் வர வாய்ப்புள்ளதாக வெளியான தகவல், வடிவேலுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் வடிவேலு, நேற்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் திருச்சியில் நடைபெற்ற ''நாடாளுமன்றத்தில் வைகோ'' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து வைகோ கட்சியில் வடிவேலு இணைகிறார் என்று பேசப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று வடிவேலுவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால் எதிர்பார்த்தபடி வடிவேலு இந்த விழாவிற்கு வரவில்லை. இதனால் வைகோ கட்சியில் வடிவேலு இணைவதாக பேசப்பட்ட செய்தி பொய்யாகி, மதிமுக தொண்டர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.
-
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications