தேனியில் வாலிபர் தற்கொலை: அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி மீது வழக்கு
தேனி: தேனியில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலை செய்யத் தூண்டியதாக அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ. ராஜா உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து(21). அவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை மாடிக்கு சென்ற சுப்புராஜ் தனது மகன் தூக்கில் பிணமாகத் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது உடலுக்கு அருகில் ஒரு கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தில் நாகமுத்து கூறியிருப்பதாவது,
என் மரணத்திற்கு ஓ.ராஜா தான் காரணம். என் மீது திருட்டுப்பழி சுமத்திவிட்டார். இது தொடர்பாக, தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதை டி.எஸ்.பி. சேது தள்ளுபடி செய்துவிட்டார்.
மேல்முறையீடு செய்தால் உன்னையும், உன் குடும்பத்தையும் திருட்டுப் பட்டம் சுமத்தி கொலை செய்து விடுவேன் என, ராஜா கூறினார். நான் புகார் செய்தேன்; புகாரை திரும்பப் பெறாவிட்டால், திருட்டு வழக்குப் பதிவு செய்து உள்ளே தள்ளி விடுவேன் என்கிறார் இன்ஸ்பெக்டர் இளங்கோவன். எனக்கும், குடும்பத்துக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கவில்லை.
அதனால் என் மரணத்தையே, பாதுகாப்புக்கு அர்ப்பணிக்கிறேன். காரணம்: 1. நகராட்சி தலைவர் ஓ.ராஜா, 2. மணிமாறன், 3. தென்கரை பேரூராட்சி தலைவர், வி.எம்.பாண்டி, 4. சிவக்குமார், 5. ஞானம், 6. லோகு, 7. சரவணன். இப்படிக்கு எஸ்.நாகமுத்து என்று அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நாகமுத்துவை தற்கொலை செய்யத் தூண்டியதாக அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ. ராஜா உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. ராஜரத்தினம் விசாரணை நடத்தி வருகின்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications