மணிக்கு 250 கி.மீ வேகத்தில் இன்னொரு சூறாவளியா?: குலைநடுங்கும் பிலிப்பைன்ஸ்
மணிலா: பில்லிபைன்ஸ் நாட்டில் அண்மையில் தாக்கிய போப்போ சூறாவளிக்கு 600 பேர் வரை பலியாகியிருக்கின்றனர். இன்னும் பல நூறு பேரின் கதி என்ன என்று தெரியாத நிலையில் மீண்டும் போப்போவைவிட வலுவான புயல் ஒன்று தாக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
பிலிப்பைன்ஸை தாக்கிய போப்போ புயலுக்கு 600 பேர் பலியாகினர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னமும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
போப்போ சூறாவளி தாக்கிய போது மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் பெருங்காற்று வீசியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய புயல், பிலிப்பைன்ஸை தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
பிலிப்பைன்ஸின் வடபகுதியில் மையம் கொண்டிருக்கும் இந்த புதிய சூறாவளி மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.
இந்த சூறாவளி இன்னும் எத்தனை நூறு உயிர்களை காவுவாங்குமோ?












Click it and Unblock the Notifications