எதியூரப்பாவின் குடைச்சலில் இருந்து தப்ப கர்நாடக சட்டசபையை கலைக்கும் பாஜக?
பெங்களூர்: கர்நாடக ஜனதா கட்சியைத் துவங்கியுள்ள எதியூரப்பாவுக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் ஆதரவளித்துள்ளதால் ஜெகதீஷ் ஷெட்டர் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக சட்டசபையை கலைத்துவிடலாமா என்று பாஜக மேலிடம் ஆலோசித்து வருகிறது.
பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா கர்நாடக ஜனதா கட்சியை நேற்று துவங்கினார். அவரது கட்சி துவக்க விழாவுக்கு ஆளுங்கட்சியினர் யாராவது சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதையும் மீறி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் நேற்று காலை எதியூரப்பாவுடன் உணவருந்தி உள்ளனர். மேலும் எதியூரப்பா புது கட்சி துவங்கிய விழா மேடையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் அமர்ந்திருந்தனர்.
225 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் 118 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதில் 21 பேர் எதியூரப்பாவை ஆதரிக்கின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முடிந்தால் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்கட்டும் என்று எதியூரப்பா சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களின் துணை இல்லாமல் ஷெட்டர் தனது பெரும்பான்மையை நிரூபித்து காட்டட்டும். அவருக்கு தைரியம் இருந்தால் எனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபையை கலைக்க வேண்டும். ஷெட்டர் இன்று முதல்வராக இருக்க எனது ஆதரவாளர்கள் தான் காரணம். 50-60 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இருந்து விலகி எனது கட்சியில் சேர தயாராக உள்ளனர். இன்னும் 4-5 மாதங்களில் சட்டசபை தேர்தல் வருகிறது என்பதால் யாரும் அவசரப்பட வேண்டாம் என்று நான் தான் அவர்களிடம் கூறியுள்ளேன் என்றார்.
முன்னதாக பொதுப்பணித் துறை அமைச்சர் சி.எம். உதாசி, நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, தொழில் துறை அமைச்சர் முருகேஷ் நிரானி, கலால்துறை அமைச்சர் ரேணுகாச்சார்யா, கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர் ரேவு நாயக் பெலாமகி மற்றும் மின்துறை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே ஆகியோரும் நேற்று காலை எதியூரப்பாவுடன் உணவருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கர்நாடக சட்டசபையை கலைத்துவிடலாமா என்று பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்











Click it and Unblock the Notifications