திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்
திருப்பதி: திருமலை வெங்கடாசலபதி ஆலயத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் இலவச தரிசனப் பகுதியில் 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமலை வெங்கடாசலபதியைக் காண ஆண்டுதோறும் பக்தர்கள் அலைமோதுகின்றனர். புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். இந்த நிலையில் தற்போது எந்த பண்டிகையுமே இல்லாத நிலையிலும் திருமலையில் சனி, ஞாயிறு தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.
ஞாயிறன்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணிவரை 43 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு வரை 1 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்து நின்றனர். பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் நேரடியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட போதிலும் தரிசனம் செய்ய 4 மணி நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தர்ம தரிசனப் பகுதியில் 18 மணி காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் 12 டிகிரிக்கும் குறைவான வெப்பம் பதிவானதால் கடும் குளிரில் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் நேற்று மதியம் 2 மணி முதல் 300 ரூபாய் சிறப்பு கட்டண கவுண்டர் மூடப்பட்டது. தங்கும் விடுதி, முடி காணிக்கை, லட்டு, உள்பட அனைத்து கவுண்டர்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.
திருமலையில் கடந்த வாரம் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. தர்ம தரிசனத்துக்கு சென்றவர்கள் கூட 2 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர். இந்த நிலையில் விடுமுறை நாளான 2-வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications