காலையில் வால்மார்ட் - பிற்பகலில் இடஒதுக்கீடு: தொடர் அமளியால் ராஜ்யசபா முடக்கம்!
டெல்லி: இந்தியாவில் நுழைய ரூ125 கோடி செலவிட்டதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்திருக்கும் விவகாரத்தாலும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரும் விவகாரத்தாலும் ராஜ்யசபா இன்று முடங்கிப் போனது.
வால்மார்ட் விவகாரம்
இந்தியாவில் நுழைவதற்காக ரூ125 கோடி செலவு செய்ததாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது. இன்று காலை ராஜ்யசபா கூடியதும் அதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி, சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அசாம் கனபரிஷத் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் இந்த விவகாரத்தை எழுப்பியதால் பெரும் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் பாதிகக்ப்பட்டன.
பின்னர் ஜீரோ நேரத்தின் போது பேசிய பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் இந்த விவகாரத்தை எழுப்பினார். "வால்மார்ட் இப்படி ஒரு கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்துவதுடன் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
ரவிசங்கர் பிரசாத்தின் கருத்தை திரிணாமுல் காங்கிரஸின் பந்தோபாத்யா ஆதரித்துப் பேசினார். இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி ராஜீவ், இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனால் அவை நடவடிக்கைகள் காலையில் முடங்கின.
இடஒதுக்கீடு மசோதா தாக்கல்
பிற்பகலில் அவை கூடிய போது ஆதிதிராவிடர் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை இணை அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு சமாஜ்வாடி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளானது. பின்னர் ராஜ்யசபா நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications