பதவி உயர்வில் இட ஒதுக்கீடு.. 'தூரத்து சொந்த'ங்களால் அவதிப்படும் மத்திய அரசு
டெல்லி: பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளின் ஆதரவோடு அன்னிய முதலீடு விவகாரத்தில் பெருமூச்சுவிட்டிருக்கும் காங்கிரஸ் இதே கட்சிகளால் பெரும் சிக்கலில் தத்தளித்தும் வருகிறது.
லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை தோற்கடித்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் பங்குதான் முதன்மையானது.
இதேபோக்கில் வங்கித்துறையில் சீர்திருத்தத்தை அமல்படுத்திவிடலாம் என நினைக்கிறது மத்திய அரசு. ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் ராஜ்யசபாவை நடத்த விடாமல் முடக்கி வைத்திருப்பதால் கவலையில் இருக்கிறது மத்திய அரசு.
அரசுப் பணிகளில் பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று குரல் கொடுக்கிறது பகுஜன் சமாஜ். இதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ராஜ்யசபாவில் தொடர்ந்து அக்கட்சி எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
ஆனால் சமாஜ்வாடி கட்சியோ, இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. நாட்டின் 82% பெரும்பானையினராக இருக்கும் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனைப் புறந்தள்ளிவிட்டு இப்படி ஒரு சட்டம் கொண்டுவர சமாஜ்வாடி கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்று எதிர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த இரு கட்சிகளின் மோதலால் ராஜ்யசபா தொடர்ந்து முடங்கியே இருக்கிறது. மத்திய அரசு கொண்டுவர நினைக்கின்றன வங்கித் துறை சீர்திருத்தம் போன்றவை முடங்கியே கிடக்கிறது. இரு கட்சிகளையும் சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
வெளியில் இருந்து ஆதரவு தரக் கூடிய ' தூரத்து சொந்த' கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளால் இடியாப்ப சிக்கலில் இருக்கிறது மத்திய அரசு!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications