கட்சி துவங்கிய சூட்டோடு ஜாமீன் பெற்ற எதியூரப்பா அன்ட் கோ

சுரங்க முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எதியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் ஆர். என். சோஹன் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரில் உள்ள சிபிஐ நீதி்மன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜாமீன் கோரி எதியூரப்பா, அவரது மகன்கள், மருமகன், முன்னாள் அமைச்சர் கிருஷ்ணைய்யா செட்டி மற்றும் 8 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எதியூரப்பா, அவரது மகன்கள், மருமகன் மற்றும் 9 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் அனைவரும் வழக்கு விசாரணைக்கு ஒழுங்காக ஆஜராக வேண்டும், சாட்சியங்களை கலைக்கக் கூடாது, அனுமதியின்றி நாட்டை விட்டு போகக் கூடாது மற்றும் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு குறித்த போலீஸ் விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதால் அவர்களால் சாட்சியங்களை கலைக்க முடியாது என்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பாஜகவில் இருந்து வெளியேறிய எதியூரப்பா நேற்று தான் கர்நாடக ஜனதா கட்சியைத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications