சமயபுரம் கோவில் உண்டியல் அருகே கிடந்த 4 மாத பெண் குழந்தை
திருச்சி: திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் அருகே 4 மாத பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று காலையில் கோவில் மா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் அருகே 4மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று நீண்ட நேரமாக தனியாக அழுது கொண்டிருந்தது. இதைக் கண்ட பக்தர்கள் சிலர் அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு பெற்றோர்கள் யார் என்று விசாரித்தனர். ஆனால் குழந்தைக்கு யாருமே சொந்தம் கொண்டாடவில்லை என்பதால் கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து கோவில் அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், குழந்தையை தூக்கிக்கொண்டு கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் தாயை தேடி பார்த்தனர். ஆனால் யாரும் வரவில்லை.
பெற்றோர் இன்றி நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்த குழந்தை மயக்கமடையும் நிலை ஏற்பட்டதால் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தையை அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அந்த குழந்தை அரசு தொட்டில் குழந்தைகள் மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பிறந்த குழந்தையை தவிக்கவிட்டுச் சென்ற கல்நெஞ்சம் படைத்த பெற்றோர் யார் என்றும் போலீசார் தேடி வருகின்றனர்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications