ஆசிட் வீச்சில் பார்வையிழந்த பெண்ணுக்கு உதவி தேவை

காரைக்காலை சேர்ந்தவர் வினோதினி. சாப்ட்வேர் என்ஜினீயர் படித்துள்ள இவர் சைதாப்பேட்டையில் தங்கி இருந்து கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
காரைக்காலைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ் வினோதினியை ஒருதலைப் பட்சமாக காதலித்துள்ளார். தனது காதலை ஏற்க மறுத்த காரணத்தால் தீபாவளிக்கு ஊருக்கு வந்த வினோதினி மீது ஆசிட் வீசினார். இதில் வினோதினியின் முகம் மற்றும் உடலில் பல பகுதிகள் கருகிப்போனது.
முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வினோதினி. நேரடியாக ஆசிட் வீசப்பட்டதால் வினோதினியின் இரு கண்களும் எரிந்து பார்வை பறிபோய் விட்டது. தொடையில் உள்ள சதையை வெட்டி எடுத்து முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர். கண்ணையும் சதையால் தைத்து மூடி உள்ளனர். வருங்காலத்தில் கண்ணின் அடையாளமாக செயற்கை கண்கள் பெருத்தலாம் என்று கூறப்படுகிறது.
வினோதினியின் தந்தை ஜெயபாலன் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். உயர் சிகிச்சை அளிக்கப்படுவதால் மகளின் மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.
கண்கள் இழந்து, எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் வாழப்போராடிக்கொண்டிருக்கும் இந்த இளம்பெண்ணுக்கு உதவி கரம் நீட்டும்படி பொதுமக்களுக்கு கீழ்பாக்கம் மருத்துவமனை ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வினோதினிக்கு உதவி செய்ய விரும்புவோர் அவரின் தந்தை வங்கி கணக்கில் தங்கள் உதவியினை அனுப்பி வைக்கலாம்:
JAYAPALAN a/c number 603899558, INDIAN BANK, Kilpauk branch, Chennai, IFCS CODE: IDIB000k037
வினோதினியைத் தொடர்பு கொண்டு உதவிகளைத் தெரிவிக்க் விரும்புவோருக்கான தொலைபேசி எண்
ரமேஷ், வினோதினியின் தாய்மாமன் - 0-9944161416.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications