கிரானைட் கொள்ளை: 'தலைமறைவு' துரைதயாநிதிக்கு ஒருவழியாக முன்ஜாமீன்!

மதுரை சுற்றுவட்டாரத்தில் அனுமதித்த அளவைவிட கூடுதலாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்து சட்டவிரோதமாக பல்லாயிரம் கோடி ரூபாயை சுருட்டிய நிறுவனங்களில் ஒலிம்பஸ் நிறுவனமும் அடங்கும்.
இந்த ஒலிம்பஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருந்தவர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி. கிரானைட் கொள்ளை வழக்கில் சிலர் சிக்கிக் கொள்ள துரைதயாநிதி உட்பட பலர் பல மாதங்களாக தலைமறைவாகிவிட்டனர். இவர்களுக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
துரைதயாநிதியை எப்படியாவது மடக்கிப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரம் காட்டினர். இதற்காக அவரது மனைவி, மைத்துனர்கள் உட்பட பலரையும் மதுரைக்கு வரவழைத்து கிடுக்குப்பிடி விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனாலும் பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் துரைதயாநிதியின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீனை வழங்கியிருக்கிறது.
இந்த வழக்கில் துரைதயாநிதி உள்ளிட்ட 10 பேருக்கும் முன்ஜாமீன் கிடைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவாகியிருக்கும் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்.
அதாவது நாளை காலை முதல் திமுகவின் வழக்கறிஞர்கள் புடைசூழ தலைமறைவு துரைதயாநிதி காவல்நிலையத்தில் கையெழுத்து போடக் கிளம்புவார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications